நாள் : 23 - டிசம்பர் - 2007
நேரம் : 11:30
வேழி அப் கிங்ஸ்லிருந்து எதிர் திசையில 15 நிமிட பயணத்தின் முடிவில், எங்க கண்களில் நின்றது உயர்ந்த பாறைகளின் முன் நிமிர்ந்து நிற்கும் ஹட்ஸெட்புட் கோவிலின் தோற்றம் தான். முன்று அடுக்கு கட்டிடம், முன்று அடுக்கிலும் வரிசை வரிசையாய் நிற்கும் தூண்கள், இப்படி அணிவகுத்து நிற்கும் தூண்களின் நடுவில் பாயும் நேர் அச்சு என இந்த கோவிலின் அமைப்பே தனிசிறப்பு தான். பெயரிலிருந்தே சொல்லிவிடலாம் இந்த கோவிலை யார் கட்டியதுனு, அமுன்ற கடவுளை வழிபடுவதற்க்காக ராணி ஹட்ஸெட்புட் கட்டியதுதான் இந்த அழகு குறையாத கோவில். இந்த கோவிலின் எளிமையிலும், கண்களை கவரும் வசிகரத்திலும் அதில் ஒளிந்திருக்கும் பெண்மையை உணரலாம்.
தலைக்கு 25 எகிப்திய பவுண்டு செலவுல உள்ளே நுழையும் போதே, இந்த கோவிலின் கதையை எடுத்து விட்டு திறமையை காட்டினார் எங்க கைடு. அவர் இழுத்தயிழுப்புக்கு என் காதுகளை செலவிடாமல், மிட்டாய் கடையை பார்த்த குழந்தை மாதிரி நல்ல படங்களுக்காக என் கண்களை அலைபாயவிட்டேன். இந்த கோவிலீடும் அழகை மொய்த்துக் கொண்டே படிகளின் முலம் அடுத்து தளத்திற்கு முன்னெரினோம்.
ஒவ்வொரு தளங்களிலும் சாரை சாரையாய் அணிவகுத்து நிற்கும் தூண்களை மட்டுமே பார்க்க முடியும். இந்த இடத்துலயெல்லாம் முன்னாடி தொன்மையான சிலைகளும் சிற்பங்களும் இருந்திருக்கும். இங்கிருந்த வெகுவரியான சிற்பங்கள் அழிந்துவிட்டதாம், எஞ்சியவைக்கு கைரோ அருங்காட்சியகம் தான் அடைக்கலம் தந்து கொண்டிருக்கிறது. மேல் தளத்தின் நடுவில் தான் கடவுள் அமுனோட கருவறை இருக்கிறது. இங்கிருந்து பார்த்தால் முழு லுக்ஸர் நகரத்தையும் ரசிக்க முடியும். கோவில் வளாகத்தை விட்டு வெளியே வரும் வரை, ராணி ஹட்ஸெட்புட்டோட ஒரு சிலையை கூட பார்க்க முடிவில்லை, காரணம் ஹட்ஸெட்புட்க்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் வரலாற்றை மாற்றெழுத முயன்றிருப்பார்கள் போல. நைல் நதியில மிதந்தவாறே மத்திய உணவை முடித்து விட்டு, அடுத்து பார்க்க போற கனார்க் மற்றும் லுக்ஸர் கோவில்களிருக்கும் கிழக்குகரையை அடைந்தோம்.
Egypt - 05 Hatshepsut temple
Date : 23 - December - 2007
Time : 11:30
After a 15 mins of travel in the other side of Kings Valley, ours eyes were pinned to the majestic view of Hatshepsut temple beneath the towering cliffs. Triple terraced structure with the central long linear axial symmetrically bisecting the array of rash columns, an unique architectural masterpiece. As the name sounds, its Queen Hatshepsut who authored this incomparable showpiece for worshipping the God Amun. Now, one can distinguish the feminine ingredients with this simple, elegant and eye-catching temple.
As we gain entree at the expense of 25 EGP, our guide showcased his skill by briefing us the history behind this temple. But I didn’t spare my ears as my eyes were flirting for the best shots through my camera, as if a child got a wish to pick from an candy shop. Gazing at the beauty offered enormously by this vast structure, we stepped up to the next layers with the help of connecting ramps.
Each layer consists of a vacant corridor with the parade of rectangular columns. In the ancient days, these corridors would have ornamented with finely carved statues and sculptures. Most of them were either robbed or being adapted in the national museum. On its top terrace there lies the main central sanctum from where God Amun supervised the Luxor city. Till we find our ways back, we couldn’t find a single statue of Queen Hatshetpsut in this temple complex, seems her male successors attempted to rewrite the history. After our lunch by cruising on the Nile, we reached the eastern bank where Karnak and Luxor temples are stationed.
No comments:
Post a Comment