நாள் : 24 - டிசம்பர் - 2007
நேரம் : 03:00
எங்க அபு ஸிம்பல் பயணமே அமர்க்களமாக தான் அரம்பித்தது, ஏனா அபு ஸிம்பலுக்கு போகும் எல்லா சுற்றுலா வாகனங்களும் ஒரெ குழுவாய், இரு பக்கமும் பாதுகாப்பு படையின் காவலில் தான் போகணுமாம். சமீபத்தில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த தீவிரவாத தாக்குதல்கள் தான் இந்த பாதுகாப்புக்கு காரணம்னு கேட்கும் போதே எங்களுக்கு வயற்றில் புளி கரைத்தது. எப்படியோ நல்லபடியாக வீடு வந்தா போதும்னு இஷ்ட தெய்வத்த நினைத்துக் கொண்டு, பயணத்தை தொடர்ந்தோம். இத்தணையிலும் ஒரு சந்தோஷம் என்னவென்றால், அபு ஸிம்பலுக்கு போய் சேர இன்னும் முன்று மணி நேரமாகுமாம், அதனால் நிம்மதியாய் ஒரு குட்டி தூக்கத்துக்கு ஆயத்தமானேன்.
சிறிது நேர பயணத்திலேயே சகாரா பாலைவனம் எங்களை சூழ்ந்துக் கொண்டது; உதிக்கும் இளஞ் சூரியனை தவிர, வழி நெடுகிழும் கண்களுக்கு எட்டிய தூரம் வரை மணலும், மணல் மேடுகளும் தான். சூரியனின் கரங்களினால் இந்த வெண் மணலும் பள பளவென பிரதிபலிக்கும் காட்சிகள் கண்களை கூசுவதாகவேயிருந்தது. நம்ம கைக்கடிகாரம் 06:30 மணியென்று சொல்லும் போதே, தற்போது நாஸர் குளக்கரையிலிருக்கும் ரமஸஸ் கோவிலிக்கு வந்துவிட்டோம். செயற்கை மலையை பின் நிலையிலும், எழிலில் மிகு குளக்கரையை முன் நிலையிலுமா பிரம்மாண்டமாக அறிமுகமானது அபு ஸிம்பல் குகைக் கோயில்.
அபு ஸிம்பலில் மொத்தம் இரண்டு குகை கோயில்கள்; இரண்டையுமே இரண்டாம் ரமஸஸ்தான் கட்டியிருக்கார், ஒன்றை தனக்காகவும் மற்றொன்றை அவர் மனைவியான நெப்பர்தாரிக்காவும்கட்டியிருக்கார். அஸ்வான் அணை கட்டும் பொழுது, நைல் நதியின் வெள்ளத்தில் இந்த கோயில்கள் மூழ்கி அழிந்துவிடும்னு எண்ணி, முதல்ல இருந்தயிடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் மேல் மட்டமான இடத்துல நகர்த்தி வைத்துயிருக்கிறார்கள். மேல் மற்றும் கீழ் எகிப்த்துகளை குறிக்கும் மகுடங்களுடன் அமர்ந்திருக்கும் நிலையில் நான்கு சிலைகளை குகைக் கோயிலின் முகப்பிலேயே பார்க்க முடியும். அந்த நான்கு சிலைகளுமே தலைவர் இரண்டாம் ரமஸஸோடது தான் தெரிந்தும் ஆச்சரியமாக தானிருந்தது. இந்த கோவிலின் சுவர்களிலும் தூண்களிலும் இருந்த ஓவியக் காட்சிகள் இரண்டாம் ரமஸஸோட புகழை துதி பாடுவதாகவேயிருந்தது.
நெப்பர்தாரி கோவிலோட நாங்க அபு ஸிம்பலை முடித்துவிட்டு அன்று மதியமே நல்ல படியாக அஸ்வான் வந்து சேர்ந்தோம். எதிர்பாராதவிதமாக குறித்த நேரத்துலேயே வந்து சேர்ந்தால், அடுத்து கைரோ இரயிலை பிடிக்க இன்னும் ஆறு மணி நேரமிருந்தது. அதனால இவ்வளவு தூரம் வந்தச்சு அஸ்வான் அணையையும், ப்பிலெ கோயிலையும் பார்த்து விடலாம்னு அடுத்து தொடர்ந்தொம்.
Egypt - 07 - Abu Simbel
Date : 24 - December - 2007
Time : 03:00
Our trip to Abu Simbel started with a surpise when our vehicle joined the convoy escorted by security vans on either side. We were rattled to know the fact that terrorists attacks in the recents pasts resulted in these security measures. We hoped for another peaceful day and moved towards Abusimbel. I was pleased to hear that it will take some 3 hours to reach, additional hours of sleep will make me in good shape atleast ;-).
After an hour of travel,we are deserted in the middle of sahara;its only sand all around our ways, nothing else other than the rising sun beyond the horizon. It was rash and bold to see through, when the whole sand of desert was glowing with the Golden rays of Sun. By the time my watch tickled 6:30, we were in the shores of Nasser lake where the Rameses Temple was relocated. The rock-cut temple was so beautiful with the artificial hill as its back ground and the sparkling lake in its front.
There two temples here in Abu simbel, one for Rameses II and other for his beloved wife Nefertari. Both these temples were dismantled and relocated some 200m from its original location in order to save these monuments from the rising water level of Nile due to Aswan Dam construction. Four mamoth statues in its sitting posture with the double crown of upper and lower egypt decorates the entrance of Rameses Temple. We were surpised to hear that all these statues were of the single pharaoh , none other than Rameses II himself. All the scenes decorated in the walls depicts only one thing; the greatness of its Pharaoh.
Finally the Abu simbel trip concluded with the dazzling temple of Nefertari and we were back to Aswan by noon. This unexpected ontime arrival, earned us a spare time of 6 hours before we depart to cairo by sleeping train. We have wisely invested this time in a small trip and proceeded towards Aswan Dam & Philae Temple.
No comments:
Post a Comment