Tuesday, 3 June 2008

இத்தாலி - 01 - ரோம்

நாள் : 03 - மே - 2008
நேரம் : 12:00

ரோமாபுரி, நான் பார்க்க விரும்பிய இடங்களின் பட்டியலில் முதன்மையானதாகவும், பல வருடங்களாக அது நிறைவேறாத கனவாகவேயிருந்தது. இந்த முறையும் அலுவலக விடுப்பு கிடைப்பதிலிருந்து விசா, டிக்கட்னு எடுத்தில்யெல்லாம் எதாவது ஒரு பிரச்சணை தொடர்ந்துக் கொண்டெயிருந்தது. அதிலும் விமான நிலையத்துக்கு அழைத்து செல்ல எற்பாடு செய்திருந்த டிரைவர் கடைசி நேரத்தில் காலவாரிவிட்டது தான் எழரையின் உச்சக்கட்டம்.இத்தனை தடைகளையும் தாண்டி எப்பவும் போல கடைசி ஆளாக ரோம்க்கான விமானத்த பிடித்துவிட்டோம்.


ரோமில் எங்க ஹோட்டலுக்குள் நுழையும் போதே மணி மதியம் 12 ஆகிவிட்டது, அதனால சோம்பேறிதனத்துக்கு இடம் கொடுக்காம உடனெ கொலோஸியம பார்க்க கிளம்பினோம். கொலோஸியம்ல கூட்டம் அதிகமாயிருக்குங்கறனால "ரோம பாஸ்"யை வலையில் முன்பதிவு செய்திருந்தோம், ஆனா அதை வாங்கறயிடத்தை டெர்மினி ரயில் நிலையத்தில் தேடி கண்டுபிடிப்பத்ற்கு ஒரு மணி நேரமாகிவிட்டது. இலண்டன், பாரிஸ் போல இல்லாம ரோமில் மெட்ரோ இரண்டெ இரண்டு மார்க்கங்களை கொண்டிருப்பதால் மிக எளிமையாக புரிந்து கொள்ளும்படியிருந்தது. கொலோஸியோ மெட்ரோ நிறுத்ததின் வாசலிலேயே மிக கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது கொலோஸியம்.

கிலாடியெடர் போன்ற படங்களில் கொலோஸியத்தின் பிரம்மாண்ட காட்சிகளை பார்த்தபின், வாழ்வில் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டுமென்றிருந்தேன், இன்று கொலோஸியத்தின் முன்பே நான், கனவு போலவேயிருந்தது. பெரும்பாலான கொலோஸியம் இடிந்து பொலிவிழந்து காணப்பட்டாலும், அதிசயத்துக்கான பிரம்மாண்டமும் வசிகரமும் நிறைந்தேயிருந்தது. கொலோஸியத்தின் பிரம்மாண்ட காட்சிகளை உணர இரு கண்களையும் முடிக்கொள்ளுங்கள், நம்ம ஈடன் கார்டன் மைதானதில் சச்சின் 90ல் விளையாடும் விருவிருப்பான ஆரவரமிக்க காட்சிகளை எண்ணிகொள்ளுங்கள் இமைகளை திறந்திடுங்கள், இந்த கொலோஸியத்தின் சுவர்கள் இதுபோன்ற எத்தனையோ காட்சிகளை அதன் நாட்களில் பார்த்திருந்திருக்கும்.


கொலோஸியத்திற்கு அடுத்து அதன் எதிரிலேயே இருக்கும் ரோமன் ஃபொரம் என்னும் பண்டய ரோமாபுரின் எஞ்சிய கட்டிடங்களும் கோவில்களும் இருக்குமிடத்திற்கு சென்றோம்.காலத்திடம் தோற்று விழுப்புண்களோடு உயர்ந்து நிற்கும் இடிந்த கோவில்களின் ஒரிரு தூண்கள் பார்வையாளர்களின் மனதில் அதன் சோகத்தை கொஞ்சமிறக்கி வைப்பது போலவேயிருந்தது.ரோமன் ஃபொரமை பார்த்து முடிக்கும் முன்பே நேரம் மாலை 6 ஆகிவட்டது, அதனால் சர்க்கஸ் மக்சிமஸை விட்டுவிட்டு பென்தியான் என்னும் "கடவுளின் கோவில்"க்கு சென்றோம்.



Italy - 01 - Roma


Date : 03 - May - 2008
Time : 12:00

Rome always topped my travel wishlist for many long years and its time encash it. It got materialised only after a long list of hurdles in geting the days-off, visa appointment dates, ticket booking and it continued till the cab driver we arranged for airport pickup ditched us at the last moments. With all this hapless moments we were 'forunate' to board the plane as the last passengers.


When we checked in our hotel in Rome it was already 12 in the morning, so we quickly refreshed ourselves and started our day in Rome. Earlier we have been advised to get Roma pass to save the queue waiting time in Colosseum, so we got the same in termini and proceed towards Colosseum by Metro. Metro in Rome is pretty simple with only two lines A and B intersecting at this main station Termini. We were already getting familiarised and located the colosseo Metro station in the map which is just two stops from Termini on Line B. When we stepped out of the colosseo station, the Colosseum itself stood in our ways infront of us.



Always wanted to see this wonder from my childhood (thanks to the films like Gladitors) and its not a dream anymore. Though most part of the colossuem were in ruined state, it retains its aura of majesticness to be part of the wonder club. One has to render their imaginative skills to bring back the energetic and rampant environment which the colosseum has offered during its adolescence. Imagine the scene of Sachin batting at 90's in fully packed Eden gardens , all these wall of colosseum would have seen many such electrifying moments.


After our day of episode in colosseum, we proceed Roman Forum an excavated site with ruins of the ancient rome, placed just opposite to that colosseum. It is very dreadful to see few columns of various ancient temples withstanding alone against the eroding time. When we thought enough of this place, it was already 6 pm and we were lagging from our schedule. So we skipped Circus Maximus and proceeded towards the Pantheon "The temple of all Gods".